9 யெகோவாவுடைய சத்தம் நகரத்தை நோக்கிக் கூப்பிடுகிறது; ஞானமுள்ளவன் உம்முடைய நாமத்தை மதிப்பான்; மிலாற்றிற்கும் அதை நேமித்தவருக்கும் செவிகொடுங்கள். 10 துன்மார்க்கருடைய வீட்டிலே துன்மார்க்கத்தினால் சம்பாதித்த பொக்கிஷங்களும், அருவருக்கப்படத்தக்க குறைந்த மரக்காலும் இன்னும் இருக்கிறதல்லவோ? 11 கள்ளத்தராசும் கள்ளப் படிக்கற்களுள்ள பையும் இருக்கும்போது, அவர்களைச் சுத்தமுள்ளவர்களென்று எண்ணுவேனோ? 12 அவர்களில் ஐசுவரியமுள்ளவர்கள் கொடுமையால் நிறைந்திருக்கிறார்கள்; அவர்களுக்குள் வாசமாயிருக்கிறவர்கள் பொய்பேசுகிறார்கள்; அவர்கள் வாயிலுள்ள நாவு கபடமுள்ளது. 13 ஆகையால் நான் உன் பாவங்களுக்காக உன்னை அடித்துப் பாழாக்குகிறதினால் உன்னைப் பலவீனமாக்குவேன்[~2~]. 14 நீ சாப்பிட்டும் திருப்தியடையாமல் இருப்பாய்; உனக்குள்ளே சோர்வுண்டாகும்; பாதுகாத்தும் நீ தப்புவிப்பதில்லை; நீ தப்புவிப்பதையும் பட்டயத்திற்கு ஒப்புக்கொடுப்பேன். 15 நீ விதைத்தும் அறுக்காமற்போவாய்; நீ ஒலிவப்பழங்களையும் திராட்சைப்பழங்களையும் ஆலையாடினாலும், எண்ணெய் பூசிக்கொள்வதுமில்லை, இரசம் குடிப்பதுமில்லை. 16 நான் உன்னைப் பாழாகவும் உன் குடிகளை ஈசலிட்டு நிந்திக்கிற நிந்தையாகவும் வைக்கும்படி, உம்ரியினுடைய கட்டளைகளும் ஆகாப் வீட்டாருடைய அனைத்துச் செய்கைகளும் கைக்கொள்ளப்பட்டு வருகிறது; அவர்களுடைய ஆலோசனைகளிலே நடக்கிறீர்கள்; ஆகையால் என் மக்களின் நிந்தையைச் சுமப்பீர்கள்.
<- மீகா 5மீகா 7 ->*அத்தியாயம் 6:5 6:5 இஸ்ரவேலின் கடைசி பாளையும் யோர்தான் நதியின் கிழக்கு பகுதியில் இறங்கினார்கள். யோசுவா 3:1, யோர்தானை கடந்து மேற்கு பகுதியில் முதன்முறையாக கானான் தேசத்தில் கில்கால் என்ற இடத்தில் பாளையம் இறங்கினார்கள் யோசுவா 4:19, இதன் மத்தியில் நடந்த அற்புத காரியம் என்னவென்றால் இஸ்ரவேலர்கள் யோர்தான் நதியை கால் நடையாக கடந்தார்கள்.
†அத்தியாயம் 6:13 6:13 ஒன்றுமில்லாமல் ஆக்குவேன், வியதியுள்ளவனாக்குவேன்